புதுடில்லி: ரஷ்யா அனுப்பி வைத்த 4வது எஸ்-400 வான் பாதுகாப்பு கவச வாகனம் இந்தியா வந்தடைந்தது.
ரஷ்யா வடிவமைத்துள்ள எஸ்-400 அதிநவீன வான் பாதுகாப்பு கவச வாகனம் இந்தியாவின் சுதர்சன சக்கரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வாகனம் 600 கிமீ தொலைவில் இருந்து வரும் ஏவுகணைகளை கண்காணிக்கும். 400 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளை இடைமறித்து அழிக்கவும் முடியும்.
2018ம் ஆண்டில் ஐந்து எண்ணிக்கையில் எஸ்-400 வான் பாதுகாப்பு கவச வாகனங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.40 ஆயிரம் கோடி. ஏற்கனவே 3 எஸ்-400 அமைப்புகள் வழங்கப்பட்ட நிலையில், ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக மீதமிருந்த 2 அமைப்புகள் தாமதமானது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் அனுப்பப்பட்ட நான்காவது எஸ்-400 தற்போது இந்தியா வந்தடைந்துள்ளது. விரைவில் எல்லைப் பகுதிகளில் நிலைநிறுத்தப்பட உள்ளது. மேலும், இந்தியா உள்நாட்டிலேயே ‘Project Kusha’ என்ற பெயரில் புதிய வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி வருகிறது.