மேற்குவங்கம்: திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் குழுவுடன் 23 எம்பிக்கள் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கு வங்கத்தில் ஆட்சியை இழந்த பின்னர், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி அதிருப்தி அதிகரித்து வருகிறது.
மம்தாவுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பெரும்பாலான எம்எல்ஏக்கள் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து நீக்கப்பட்ட ரிட்பிரடா பானர்ஜி, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது மம்தா பானர்ஜிக்கு புதிய அரசியல் சவாலாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் உள்ள மொத்தம் 23 எம்பிக்கள் அதிருப்தி எம்எல்ஏக்கள் குழுவுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அபிஷேக் பானர்ஜியின் செயல்பாடுகள் மீதான அதிருப்தியும் இதற்குக் காரணமாக கூறப்படுகிறது.