சென்னை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று 11 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்துள்ளது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 104.72 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மாநிலம் முழுவதும் 11 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 104.72 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் கடலூரில் தலா 103.82 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
நாகப்பட்டினத்தில் 103.28 டிகிரி பாரன்ஹீட், வேலூரில் 103.1 டிகிரி பாரன்ஹீட் மற்றும் மதுரை நகரில் 102.56 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும் திருத்தணியில் 102.38 டிகிரி பாரன்ஹீட், தொண்டி, தஞ்சாவூர் மற்றும் பரங்கிப்பேட்டையில் தலா 102.02 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், புதுச்சேரியில் 102.74 டிகிரி பாரன்ஹீட் மற்றும் காரைக்காலில் 100.04 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை போன்ற சூழல் நிலவி வருவதால், பொதுமக்கள் தேவையற்ற வெளிப்புற பயணங்களை தவிர்க்கவும், போதிய அளவு தண்ணீர் அருந்தவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.