சென்னை: பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை திட்டம் நாளை தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
இந்த திட்டத்தை முதலமைச்சர் விஜய் கடந்த மே 9-ம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் தொடங்கி வைக்க இருந்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், ஏற்கனவே இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்ட இந்த திட்டம் நாளை தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த சிறப்பு அதிரடிப்படை மாநிலம் முழுவதும் செயல்படவுள்ளது.