புதுடில்லி: இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையேயான விரிவான மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்த இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.
புதுதில்லியில் நடைபெற்ற 8வது இந்தியா – இந்தோனேசியா கூட்டுக் குழு கூட்டத்தில் ஜெய்சங்கர் மற்றும் சுஜியோனோ ஆகியோர் கலந்து கொண்டு தலைமை தாங்கினர்.
அடுத்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி ஜகார்த்தாவிற்கு மேற்கொள்ள உள்ள பயணத்திற்கு முன்னதாக இந்த சந்திப்பு நடைபெற்றது. அரசியல் உறவுகள், பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடு, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, கல்வி, விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான 75 ஆண்டுகால இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த இந்த சந்திப்பு முக்கிய பங்காற்றும் என இரு தரப்பினரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.