சேலம்: வீரபாண்டி துணை மின்நிலைய பராமரிப்பு பணிகளுக்காக சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
சேலம் மாவட்டம் வீரபாண்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், இன்று (15-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்படுகிறது.
ஆட்டையாம்பட்டி, வேலநத்தம், மருளையம்பாளையம், பெத்தாம்பட்டி, ராஜாபாளையம், கூலிப்பட்டி, எட்டிமாணிக்கம்பட்டி, ராக்கிப்பட்டி, எஸ்.பாப்பாரப்பட்டி, சென்னகிரி, முத்தனம்பாளையம், ஏரிக்காடு, வீரபாண்டி, பாலம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.