உத்தரபிரதேசம்: அகிலேஷ் யாதவின் மகளை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்களுக்கு எதிராக FIR பதிவு செய்ய யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் மகளின் புகைப்படத்தை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் மாற்றியமைத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சமாஜ்வாடி கட்சி, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்த நிலையில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக FIR பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார்.
அசாம்கார்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யநாத், “மகள்களுக்கு எதிரான இத்தகைய கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. மகள் என்றால் அனைவருக்கும் மகள்தான். பெண்களின் மரியாதையை காக்க வேண்டியது சமூகத்தின் பொறுப்பு” என்று தெரிவித்தார்.