மேற்குவங்கம்: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று மக்களவை சபாநாயகருக்கு அபிஷேக் பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
மேற்கு வங்க அரசியலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டசபை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் சிலர் தனியாக செயல்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், கட்சியின் எதிர்காலம் குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.
இதற்கிடையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் மக்களவை உறுப்பினரான அபிஷேக் பானர்ஜி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் தரப்பின் விளக்கத்தை கேட்க வேண்டும் என்றும், அதிகாரப்பூர்வ தலைவர் மற்றும் கொறடா மூலமே கட்சி பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தனிப்பட்ட குழுக்கள் அல்லது பிரிவுகளுக்கு அங்கீகாரம் வழங்கக்கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.