பெர்லின்: டென்னிஸ் ஜாம்பவான் செரினா வில்லியம்ஸ், பெர்லின் ஓபன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொழில்முறை டென்னிஸுக்கு மீண்டும் திரும்பிய செரினா வில்லியம்ஸ், பெர்லின் ஓபன் தொடரில் தனது முதல் ஆட்டத்திலேயே தோல்வியை சந்தித்தார்.
இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில், செரினா வில்லியம்ஸ் மற்றும் கரோலினா முச்சோவா ஜோடி, குய்லியானா ஆல்மோஸ் மற்றும் எரின் ரவுட்லிஃப் ஜோடியை எதிர்கொண்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆல்மோஸ் – ரவுட்லிஃப் ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
2022 அமெரிக்க ஓபன் தொடருக்குப் பிறகு செரினா வில்லியம்ஸ் பங்கேற்ற முதல் தொழில்முறை போட்டி இதுவாகும். 44 வயதான செரினா, ஸ்டெஃபி கிராஃப் மைய மைதானத்தில் ரசிகர்களின் பலத்த கைதட்டலுடன் வரவேற்கப்பட்டார்.
தோல்வி அடைந்த போதிலும், ரசிகர்களின் அன்பும் ஆதரவும் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.