பிலிப்பைன்ஸ்: பிலிப்பைன்சின் மிண்டனாவோ தீவு அருகே 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பு அல்லது பெரிய சேதம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மிண்டனாவோ தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.
பூமிக்கு அடியில் சுமார் 112 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் கடந்த ஜூன் 8-ம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துடன் தொடர்புடையதல்ல என பிலிப்பைன்ஸ் நில அதிர்வு ஆய்வு அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.