பிரான்ஸ்: பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உலகத் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளார்.
உலகின் முன்னணி பொருளாதார நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஜி7 உச்சி மாநாடு பிரான்ஸ் நாட்டின் ஈவியன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தனது சமூக வலைதளப் பதிவில் உலகத் தலைவர்களுடன் கலந்துரையாட ஆவலுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மாநாட்டின் போது பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்தித்து பேசியதுடன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனும் சிறிது நேரம் உரையாடினார்.
சர்வதேச பொருளாதாரம், பாதுகாப்பு, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஜி7 அமைப்பின் உறுப்பினர்களாக உள்ளன.