நியூயார்க்: ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு எதிர்ப்பு தெரிவித்து சில மாணவர்கள் ‘ப்ரீ பாலஸ்தீனம்’ முழக்கமிட்டு வெளிநடப்பு செய்தனர்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை பங்கேற்றார்.
அவர் உரையாற்ற மேடையேறியபோது, சில மாணவர்கள் பாலஸ்தீன ஆதரவு முழக்கங்களை எழுப்பி, பாலஸ்தீனக் கொடிகளை அசைத்தபடி அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
கூகுளின் சில ஒப்பந்தங்கள் மற்றும் அதன் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து தனது உரையைத் தொடர்ந்த சுந்தர் பிச்சை, செயற்கை நுண்ணறிவு அல்லது தொழில்நுட்பம் குறித்து பேசாமல், மாணவர்களுக்கு வாழ்க்கைத் திறன்கள், மனப்பான்மை வளர்ச்சி மற்றும் சவால்களை சமாளிக்கும் திறன் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.