சூடான்: சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவப்படைகளுக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த ஆண்டு மட்டும் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
சூடானில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் ராணுவத்திற்கும் விரைவுப் படை (RSF) எனப்படும் துணை ராணுவ அமைப்பிற்கும் இடையே கடுமையான மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மோதல்களில் சமீபகாலமாக டிரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் தெரிவித்துள்ளது.
ஜெனீவாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க், 2026-ம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலத்தில் டிரோன் தாக்குதல்களால் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக கூறினார்.
மேலும், பாலியல் வன்கொடுமைகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்து வருவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.