சென்னை: சட்டப்பேரவை நேரலை மீண்டும் தொடங்கியிருப்பது ஜனநாயகத்தின் வெளிப்படைத்தன்மைக்கு எடுத்துக்காட்டாகும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் உரைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், தமிழுக்கு எப்போதும் முதலிடம் அளிக்கும் தமிழக அரசின் நிலைப்பாடு தொடரும் என்று தெரிவித்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டதையும், சட்டப்பேரவையின் கண்ணியத்தை பாதுகாக்கும் வகையில் அரசு செயல்படுவதாகவும் அவர் கூறினார்.
இரண்டு முதல் மூன்று ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த சட்டப்பேரவை நேரலை தற்போது மீண்டும் தொடங்கியிருப்பதாகவும், இனி அது தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
மேலும், சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் சமூக நீதி தொடர்பான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.