மாம்பழம் மற்றும் மாங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளின் உழைப்புக்கு நியாயமான வருமானம் கிடைக்க அரசு நேரடி கொள்முதல் திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.