வாஷிங்டன்: அமெரிக்கா–ஈரான் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் 60 நாள் காலக்கெடு நிறைவடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் கடந்த ஜூன் மாதம் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதாக கூறப்பட்டது. அதன்படி, இரு தரப்பும் தாக்குதல்களை நிறுத்துவதுடன், ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள நிபந்தனைகளை 60 நாட்களுக்குள் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், ஒப்பந்த நிபந்தனைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என கூறப்படுகிறது. ஈரான் சரணடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் வலியுறுத்தி வரும் நிலையில், மோதலுக்கு தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
