மும்பை: தடை செய்யப்பட்ட பான் மசாலா விளம்பரத்தில் நடித்ததாகக் கூறி பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோருக்கு மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மகாராஷ்டிராவில் பான் மசாலாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ‘விமல் எலைச்சி’ விளம்பரத்தில் நடித்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பான் மசாலாவை மறைமுகமாக விளம்பரப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு 15 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற விளம்பரங்களில் தொடர்ந்து பங்கேற்பதை நிறுத்துவதுடன், புகையிலை தொடர்பான விளம்பர உள்ளடக்கங்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
