வாஷிங்டன்: அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தை சக்திவாய்ந்த புயல் தாக்கிய நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கனமழையால் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து, ஹமில்டன், ரெவன்வுட் உள்ளிட்ட பல நகரங்களில் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நிலைமையை கருத்தில் கொண்டு இண்டியானா மாகாணத்தில் அவசர நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
