லண்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தலைமைப் பணியாளர் சூசி வைல்ஸ் எனக் கூறி, பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமிடம் மர்ம நபர் ஒருவர் குறுஞ்செய்தி மூலம் தொடர்பு கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மர்ம நபர், சூசி வைல்ஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டு பிரதமரிடம் மெசேஜ் வாயிலாக தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே தொலைபேசி உரையாடல் நடைபெறவில்லை என்றும், முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் எதுவும் பரிமாறப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் சந்தேகத்துக்குரியவை என கண்டறியப்பட்டதும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே சூசி வைல்ஸின் தொலைபேசி சமீபத்தில் ஹேக் செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக எஃப்.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
