சென்னை: சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் அணிந்திருந்த மஞ்சள் நிற சேலை மற்றும் பச்சை நிற ஜாக்கெட் ரசிகர்களிடையே பெரும் கவனம் பெற்றது.
இதன் தாக்கமாக பெங்களூரில் துணிக்கடைக்கு சென்ற இளம் பெண்கள், த்ரிஷா அணிந்திருந்த வண்ணக் கலவையைப் போன்ற மஞ்சள் நிற சுடிதார் மற்றும் பச்சை நிற துப்பட்டாவை தேர்வு செய்த காட்சியும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
த்ரிஷாவை ரசிகர்கள் தற்போது ‘தலைவி’ என அழைத்து வரும் நிலையில், அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு அளித்த பேட்டியில், எதிர்காலத்தில் தமிழக முதல்வராக வேண்டும் என்ற ஆசை இருப்பதாக த்ரிஷா தெரிவித்திருந்ததாகவும் ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
எனினும், த்ரிஷா தற்போது வரை அரசியலுக்கு வருவதாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய்க்கு அவர் சல்யூட் அடித்ததும், கையசைத்ததும் தொடர்பான காட்சிகளும் இணையத்தில் வைரலானது.
இதற்கிடையே, சுதந்திர தின விழாவில் தாம் அணிந்திருந்த மஞ்சள் நிற சேலை தனது தாயாருடையது என்று த்ரிஷா சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
திரைப்படப் பணிகளைப் பொறுத்தவரை, இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கும் வெப்தொடரில் த்ரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மோகன் ராஜா இயக்கத்தில் கார்த்திக்கு ஜோடியாகவும் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கார்த்தி–த்ரிஷா இணைந்து நடித்த படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
