லண்டன்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அமெரிக்கா மற்றும் கனடா பயணத்தைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு சென்றுள்ளார்.
அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், தொடர்ந்து இங்கிலாந்து சென்றடைந்தார்.
லண்டனில் உள்ள சுவாமிநாராயணன் கோவில் மற்றும் குருத்வாராவுக்கு சென்ற மோகன் பகவத் அங்கு வழிபாடு மேற்கொண்டார்.
இங்கிலாந்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளதாகவும், வருகிற 7-ம் தேதி வரை அங்கு தங்கியிருந்து பின்னர் இந்தியா திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
