திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 76,060 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று மட்டும் 76 ஆயிரத்து 60 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 32 ஆயிரத்து 248 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
அன்றைய தினம் தேவஸ்தான உண்டியல் மூலம் ரூ.3 கோடி காணிக்கை கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 4 லட்சத்து 56 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 2 லட்சத்து 21 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றனர். திருமலை அஸ்வினி மருத்துவமனையில் 4,208 பேர் மருத்துவ சிகிச்சை பெற்றனர்.
இதனிடையே, தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்ட இலவச தரிசன நேர ஒதுக்கீட்டு டோக்கன் இல்லாமல் தரிசனத்துக்கு சென்ற பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
