சென்னை: உடலுக்கு நன்மைகளை அள்ளித்தரும் கம்பு காய்கறி தோசை செய்வோம் வாங்க.
தேவையான பொருட்கள்:
– கம்பு மாவு – 1 கப்
– அரிசி மாவு – கால் கப்
– வெங்காயம் – 1
– கேரட் – 1
– பச்சை மிளகாய் – 2
– கொத்தமல்லி, உப்பு
செய்முறை: கம்பு மாவு, அரிசி மாவு இரண்டையும் ஒன்றாகக் கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.
நறுக்கிய வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து கலக்கவும்.
தோசைக்கல்லில் மாவை ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவிடவும். தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம்.
