சென்னை: சென்னை திருவான்மியூரில் தவெக சார்பில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை தொகுதி வாரியாக அழைத்து சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது.
விழாவிற்கு தவெக தலைவர் விஜய் தலைமை வகித்து மாணவர்களுக்கு பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார்.
முதற்கட்டமாக 21 மாவட்டங்களைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விஜய் 9 மாணவர்களுக்கு வைர மோதிரம் மற்றும் வைர கமால் பரிசளித்தது நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகும்.
அதன்படி, பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த பிரதிக்ஷா, திருப்பூரைச் சேர்ந்த மகாலட்சுமி, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தோஷிதா லட்சுமி ஆகியோரை விஜய் கவுரவித்தார்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 6 இடங்களை பிடித்த தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தேவதர்ஷினி, சந்தியா, திண்டுக்கல் காவ்யஸ்ரீ, ஈரோடு கோபிகா, ராமநாதபுரம் காவ்யா ஜனனி, திருநெல்வேலி சஞ்சனா ஆயுஷ் ஆகியோருக்கு வைர மோதிரம் வழங்கப்பட்டது.
இதுதவிர நாங்குநேரியை சேர்ந்த மாணவர் சின்னத்துரைக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.