உத்தரபிரதேசம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு… உ.பி. அரசு கொண்டு வந்த மதரஸா கல்வி வாரிய சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மதரஸா கல்வி வாரியத்தால் மதச்சார்பின்மைக்கு பாதிப்பு ஏற்படாது எனக்கூறி, உத்தரபிரதேச மாநில அரசு கொண்டுவந்த மதரஸா கல்வி வாரிய சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மதரஸா கல்வி வாரியச் சட்டம் செல்லாது என்ற அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, சிறுபான்மையினர் கல்வி நிலையங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்றும், சிறுபான்மையினர் கல்வி நிலையங்களை மாநில அரசுகள் ஒழுங்குபடுத்த இயலும் என்றும் தீர்ப்பளித்தது.