சைவ உணவு உண்பவர்களுக்கு காளான் மிகவும் பிடித்தமான உணவு. அசைவ பிரியர்களும் காளான்களை விரும்பி சாப்பிடுவார்கள். இப்படி சப்பாத்திக்கு இந்த காளான் சுக்கா செய்தால் அவ்வளவு ருசியாக இருக்கும். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான அளவு
காளான் – 2 பாக்கெட்
சின்ன வெங்காயம் – 10
பெரிய வெங்காயம் – 3
மல்லி தூள் – 1/4 tbs
மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
மிளகாய் தூள் – 1/2 tbs
பொடி அரைக்க
மிளகு – 1/4 tsp
சோம்பு – 1/4 tsp
சீரகம் – 1/4 tsp
செய்முறை
முதலில் பொடி அரைக்க சோம்பு, மிளகு மற்றும் சீரகம் போன்றவற்றை ஜாரில் சேர்த்து மிக்ஸியில் பவுடராக அரைத்துக்கொள்ளுங்கள்.
பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றிக்கொள்ளுங்கள்.கிராம்பு, பட்டை, ஏலக்காய் , சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளுங்கள்.
பிறகு 2 பெரிய வெங்காயம் மற்றும் 10 சின்ன வெங்காயம் சேர்த்து வதக்குகள்.
பொன்னிறமாக வந்ததும், காளான் சேர்த்து வதக்குங்கள்.
அடுத்து மல்லி தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறிவிடுங்கள். தண்ணீர் ஊற்றாமல் கிளறவும். காளானில் இருக்கும் தண்ணீர் பிரிந்து விடும் . அப்போது காளான் கொஞ்சம் சுருங்க தொடங்கும்.
அந்த சமயத்தில் கொஞ்சம் தண்ணீர் தெளித்து தட்டு போட்டு மூடிவிடுங்கள். 5 நிடத்திற்கு நன்கு சுறுங்கி வெந்துவிடும்.
கடைசியாக அரைத்த பொடியை சேர்த்து 1 நிமிடத்திற்கு நன்கு கிளறுங்கள். கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் காளான் சுக்கா தயார்.
இந்த காளான் சுக்கா, சப்பாத்தி, தோசை போன்ற உணவுகளுடன் அருமையாக சாப்பிடலாம்.