டாக்கா: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சியில் அதானி குழுமத்துடன் கையெழுத்திட்ட எரிசக்தி ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய வங்கதேச அரசு திட்டமிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தில் மின்சாரம் மற்றும் எரிசக்தி வழங்கல் சட்டத்தின் கீழ் கையொப்பமிடப்பட்ட மின் ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது.
2009 முதல் 2024 வரை பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தில் கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்களை இந்தக் குழு ஆய்வு செய்து வருகிறது. அனைத்து வங்காளதேச நிறுவனங்களும் முந்தைய அரசாங்கத்துடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. அதானி ஒப்பந்தங்கள் செய்யப்பட்டபோது வங்கதேச அதிகாரிகள் உதவியதாகக் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சியின் போது கையெழுத்திட்ட அதானி குழுமத்துடன் எரிசக்தி ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய வங்கதேச அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அடுத்த கட்ட விசாரணையை மேற்கொள்வதற்காக விசாரணைக் குழுவின் அதிகாரிகளை உடனடியாக குழுவிற்கு நியமிக்க வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், சூரிய ஒளி மின்சாரம் விற்பனை செய்ய இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்ததாக பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி மீது அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.