சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை:- கேரளாவின் பயோமெடிக்கல், பிளாஸ்டிக், இறைச்சி கழிவுகளை கொட்டும் இடமாக நமது தென் மாவட்டங்கள் மாறிவிட்டன. இந்த கழிவுகளை தடுக்க வேண்டிய சோதனைச் சாவடிகள் வெறும் சேகரிப்பு மையங்களாக மாறிவிட்டன.
ஒருபுறம் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக கனிமங்கள் கடத்தப்படுகின்றன. தமிழக எல்லையோர மாவட்டங்கள் கேரளாவின் குப்பை மேடாக மாறுவதை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால், ஜனவரி முதல் வாரத்தில், பொதுமக்களை திரட்டி, இந்த உயிரி மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகளை லாரிகளில் ஏற்றி, கேரளாவுக்கு கொண்டு சென்று கொட்டுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.