By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி நிலையங்கள், இராணுவ தளங்கள் மீது தாக்குதல்..!!
    2 Min Read
    ஏர் இந்தியா விபத்து: பங்குச் சந்தையில் போயிங் 8% சரிந்தது
    2 Min Read
    இஸ்ரேல் தாக்குதலில் தெஹ்ரான் வெடிச்சத்தங்களால் பதற்றம்: மேற்கு ஆசியா பரபரப்பு நிலை
    1 Min Read
    வாகன வரி உயர்வு மூலம் உற்பத்தி மேம்பாடு நோக்கி அமெரிக்கா: டிரம்ப் அறிவிப்பு
    1 Min Read
    மசாசூசெட்ஸில் அதிர்ஷ்டவசமான விமான விபத்து: பயணிகள் பத்திரமாக மீட்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பிரதமர் மோடி நேரில் சென்று ஆறுதல்
    1 Min Read
    உயிரிழந்த மணிப்பூர் விமானப் பணிப்பெண்… வேதனையை ஏற்படுத்தும் கதை
    2 Min Read
    விமான விபத்து… போயிங் ரக விமானங்களை ஆய்வு செய்ய உத்தரவு
    1 Min Read
    திருப்பதி மலைப்பாதை புனரமைப்பு பணிகள்: தேவஸ்தானம் வேண்டுகோள்..!!
    1 Min Read
    பேரிடர் நடந்த இடம் மனதை உருக்குகிறது: பிரதமர் மோடி வேதனை..!!
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ரத்த ஓட்டம் குறைவதால் உடல் வலி ஏற்பட அதிக வாய்ப்பாம்
    1 Min Read
    நெல்லி ஜூஸ் தினமும் பருகுங்கள்… ஏராளமான நன்மை அடையுங்கள்
    1 Min Read
    விபூதி, குங்குமத்தை நெற்றியில் வைப்பது எதனால் என்று தெரியுங்களா!
    1 Min Read
    அதிகாலை கண் விழித்தவுடன் பெண்கள் செய்ய வேண்டியவை!!!
    2 Min Read
    அண்ணாமலையின் நிலைப்பாடு கூட்டணிக்கு பாதகமா? : திருமாவளவன் குற்றச்சாட்டு
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: வீட்டு திட்ட வரைப்படம் எப்படி அமைய வேண்டும்… தெரிந்து கொள்ளுங்கள்!!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > வீட்டு திட்ட வரைப்படம் எப்படி அமைய வேண்டும்… தெரிந்து கொள்ளுங்கள்!!!
தமிழகம்

வீட்டு திட்ட வரைப்படம் எப்படி அமைய வேண்டும்… தெரிந்து கொள்ளுங்கள்!!!

Nagaraj
Last updated: December 21, 2024 11:24 am
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு வாழ்வில் ஒரே ஒரு முறை மட்டுமே சொந்த வீடு கட்டும் பாக்கியம் கிடைக்கிறது. வீட்டை கட்டுவது என்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அதனால் வீட்டின் திட்ட வரைபடம் (Housing Plan) என்பது முக்கியமான ஒன்று. அதை முடிவுசெய்வதற்கு முன் நாம் முடிவுசெய்ய வேண்டிய சில விஷயங்களைக் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.

திட்ட வரைபடத்தில் வீட்டில் ஒவ்வோர் அம்சமும் நுணுக்கமாக விவரிக்கப்பட்டிருக்கும். அதை உற்று நோக்கினால் புரிந்துகொள்ளலாம். முதலில் கவனிக்காமல் விட்டுவிட்டுப் பின், ‘கதவு வெளிப்புறமாகத் திறப்பது போல் அமைந்துள்ளது’, ‘அறையில் போதிய அளவில் ஜன்னல்கள் இல்லை’ என்பன போன்ற குற்றச்சாட்டுகளைக் கூறுவதால் பலன் இல்லை.

புளு பிரிண்ட் என்று கூறப்படும் கட்டிட வரைபடத்தில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு குறியீடும் ஒவ்வொரு பொருளை உணர்த்தும். கதவுக்கான குறியீடு ஒரு மாதிரியும் ஜன்னலுக்கான குறியீடு ஒரு மாதிரியும் வெண்ட்டிலேட்டர் போன்றவற்றுக்கான குறியீடு ஒருமாதிரியுமாக அனைத்தையும் பிரித்துக் காட்டப்பட்டு இருக்கும்.

முதலில் நம்முடைய வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் திட்ட வரைபடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கை முறை, குடும்பத் தேவை, குடும்பச் சூழல், பட்ஜெட் போன்றவற்றைச் சார்ந்து இது இருக்கும்.

இன்றைய தேவைகளுடன் எதிர்காலத் தேவையையும் கணக்கில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்.

ஒருவர் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்பவராக இருக்கலாம். வீட்டிலேயே பணிபுரியும் நபராக இருக்கலாம். ஹோம் தியேட்டர் அமைத்துத் திரைப்படங்களைப் பார்க்க விரும்புபவராக இருக்கலாம். பிரத்யேகத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு ஏற்றதாக வீட்டின் வரைபடம் உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

அறைகளைப் பொறுத்தவரை வெறுமனே நீள, அகல அளவுகளை மட்டும் பார்க்கக் கூடாது. அறையில் என்னென்ன எங்கெங்கே வரும் என்பதை ஓரளவுக்கு முன்பே தீர்மானித்து, அதற்கேற்றபடி வரைபடம் அமைக்கப்பட்டுள்ளதா எனச் சரிபார்க்க வேண்டும்.

மனையின் மீது கட்டப்படப்போகிறது என்றால், முதலில் மனையின் தன்மையை ஆராய வேண்டும். எந்தப் பக்கம் காற்று அதிகமாக வீசும், எந்தப் பக்கம் வெளிச்சம் இருக்கும் என்பதையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டு கதவுகள், ஜன்னல்கள் அமைக்கப்படுகின்றனவா என்று சரிபார்க்க வேண்டும்.

வீட்டில் நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் வேண்டும் என்றால் அதற்கேற்றபடி கதவுகளையும் ஜன்னல்களையும் அமைக்க வேண்டும்.

மின் இணைப்பு, குடிநீர்க் குழாய் இணைப்பு, கழிவு நீர் வெளியேற்றம் போன்றவை முக்கியமானவை. அதனால் அதற்கேற்றபடி கட்டிட வரைபடம் உள்ளதா என்று ஆராய வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் மழைநீர்ச் சேகரிப்பு என்பதும் மிகவும் முக்கியம் என்பதால் அதற்குரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா எனப் பார்க்க வேண்டும்.

சமையலறையின் மேடை என்பது தரையிலிருந்து 75 முல் 80 செ.மீ உயரத்தில் அமைந்திருக்க வேண்டும். நம் வீட்டுப் பெண்களின் உயரத்துக்கேற்ப சமையலறை மேடை அமைய வேண்டும். சமையலறையின் ஜன்னல்களிலிருந்து வரும் காற்று அடுப்பை அணைத்து விடாதவாறு ஜன்னல்கள் அமைக்க வேண்டும்.

முதலில் கவனியாமல் விட்டுவிட்டு, பின் கட்டிடத்தின் அளவுகளில் மாற்றம் செய்தால், கட்டுமானச் செலவு எதிர்பார்த்ததைவிட அதிகரித்துவிடும். எனவே, முதலிலேயே முன்னெச்சரிக்கையுடன் வீட்டுத் திட்ட வரைபடத்தைச் சரி பார்க்க வேண்டியது அவசியம்.

You Might Also Like

ரத்த ஓட்டம் குறைவதால் உடல் வலி ஏற்பட அதிக வாய்ப்பாம்

நெல்லி ஜூஸ் தினமும் பருகுங்கள்… ஏராளமான நன்மை அடையுங்கள்

விபூதி, குங்குமத்தை நெற்றியில் வைப்பது எதனால் என்று தெரியுங்களா!

அதிகாலை கண் விழித்தவுடன் பெண்கள் செய்ய வேண்டியவை!!!

அண்ணாமலையின் நிலைப்பாடு கூட்டணிக்கு பாதகமா? : திருமாவளவன் குற்றச்சாட்டு

TAGGED:buildingessentialhouse plan drawingkitchenwindowsஅவசியம்கட்டிடம்சமையலறைவீட்டு திட்ட வரைப்படம்ஜன்னல்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
இந்தியா

பிரதமர் மோடி நேரில் சென்று ஆறுதல்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?