ஸ்ரீநகரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெப்பநிலை மைனஸ் 8.5 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத குறைந்த வெப்பநிலை இதுவாகும். டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் காஷ்மீரில் கடும் குளிர் தொடங்கும். இது 40 நாட்களுக்கு நீடிக்கும். இந்த கடும் குளிர் காஷ்மீரில் நேற்றுமுன்தினம் தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஸ்ரீநகரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெப்பநிலை மைனஸ் 8.5 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத குறைந்த வெப்பநிலை இதுவாகும். இதற்கு முன், 1974 டிசம்பரில் மைனஸ் 10.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைந்தது.ஸ்ரீநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை டிசம்பர் 13, 1934 அன்று மைனஸ் 12.8 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது.
காஷ்மீரில் நிலவும் கடும் குளிர் காரணமாக தால் ஏரியின் சில பகுதிகள் உட்பட பெரும்பாலான நீர்நிலைகள் உறைந்து கிடக்கின்றன. காஷ்மீரின் பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தெற்கு காஷ்மீரின் சுற்றுலாத் தலமான பாகல்காமில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 8.6 டிகிரி செல்சியஸாகவும், குல்மார்க்கில் மைனஸ் 6.2 டிகிரி செல்சியஸாகவும், குப்வாராவில் மைனஸ் 7.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது.
காஷ்மீரில் டிசம்பர் 26-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என்றும், உயரமான மலைப் பகுதிகளில் லேசான பனிப்பொழிவு இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு காஷ்மீரில் ஓரிரு இடங்களில் குளிர்ந்த காற்று வீசும் என்று கூறப்பட்டுள்ளது. காஷ்மீரில் நிலவும் கடும் குளிர் காலம் ஜனவரி 31-ம் தேதியுடன் முடிவடைந்த பிறகு படிப்படியாக குளிர் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.