தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியனை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஜூன் 30, 1958-ல் பிறந்த வி.ராமசுப்பிரமணியன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாகப் பணியாற்றினார்.
பின்னர் தெலுங்கானா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு அங்கிருந்து ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார். அங்கிருந்து, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட வி.ராமசுப்பிரமணியன், கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு பெற்றார். இந்நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வி.ராமசுப்ரமணியனை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.