சென்னை: தமிழக ஆளுநர் ரவிக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
பல்வேறு மசோதா நிலுவை, துணை வேந்தர் நியமனம் ஆகிய விவகாரங்களில் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கெனவே ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இன்று (பிப்.6) மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. முன்னதாக ஆளுநர் மசோதாக்களுக்கு உரிய பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.