மேஷம்: தேவைகள் நிறைவேறும். வெளியூர் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடன்களை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். அலுவலகத்தில் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.
ரிஷபம்: விடாமுயற்சியுடன் செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர்கள். கணவன்-மனைவி இடையே பாசப்பிணைப்பு ஏற்படும். பணப் பற்றாக்குறை நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் இடமாற்றம் ஏற்படும்.
மிதுனம்: நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்வார்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்களைக் காண்பீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.

கடகம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். யாருக்கும் சாட்சியாக கையெழுத்திட வேண்டாம். மனைவியுடன் மனம் வருந்துவீர்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். அலுவலகத்தில் விவாதங்களைத் தவிர்க்கவும்.
சிம்மம்: குடும்பத்துடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசு வழியில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பிரபலங்களின் நட்பைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உங்கள் தொழில் வெற்றிகரமாக அமையும்.
கன்னி: பணவரவு இருக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் மத்தியில் உங்கள் நற்பெயர் அதிகரிக்கும். உங்கள் வியாபாரம் விறுவிறுப்பாக இருக்கும். உங்கள் கடன்கள் வசூலாகும். அலுவலகத்தில் புதிய பதவி கிடைக்கப் பெறுவீர்கள்.
துலாம்: பல காரியங்களைச் சமயோசித மனதுடன் செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய கடன்கள் வசூலாகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.
விருச்சிகம்: எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் பிரச்சனைகள் நீங்கும். ஆன்மீகத்தில் நாட்டம் கொள்வீர்கள். உங்கள் தொழில் வெற்றி பெறும். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
தனுசு: உங்கள் சேமிப்புகள் செலவாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் குடும்பத்தினரிடம் கோபம் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் அந்நிய மொழி வாடிக்கையாளர்கள் உங்களிடம் வருவார்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்களைப் பாராட்டுவார்கள்.
மகரம்: கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் வரும். உங்களின் சேமிப்புகள் செலவிடப்படும். வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் விவாதங்கள் ஏற்படும். வேகத்தை விட விவேகம் முக்கியம்.
கும்பம்: அரசு காரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். வெளியூர் உறவுகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பொருட்கள் விற்கப்படும். அலுவலகத்தில் அமைதி நிலவும்.
மீனம்: வெளியூரில் இருந்த உறவினர்கள், நண்பர்கள் ஓடி வந்து பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே பரஸ்பர புரிதல் இருக்கும். வியாபாரத்தில் பழைய கடன்கள் வசூலாகும். அலுவலகத்தில் யார் மீதும் பகைமை கொள்ளாதீர்கள்.