சென்னை : நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அளிக்கும் பென்ஸ் படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் இணைந்துள்ளார். இதன் மூலம் LCU-ல் ஹரிஷ் கல்யாண் சேர்ந்துள்ளார்.
பார்க்கிங், லப்பர் பந்து என வசூல் வெற்றிப் படங்களில் நடித்துவரும் ஹரிஷ் கல்யாண் தற்போது LCU-ல் இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ படத்தில் முக்கிய ரோலில் நடிக்க அவர் கமிட்டாகி இருக்கிறாராம். ஏற்கனவே, இப்படத்தில் நிவின் பாலி, மாதவன் ஆகியோரும் நடிப்பதாக கூறப்படும் நிலையில், பெரிய மல்டி ஸ்டார் படமாக வரும்போல் இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெகு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது,