இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து, அவரின் அடுத்த படம் ‘குட் பேட் அக்லி’ அடுத்த மாதம் 10 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிக்கின்றனர். படத்தில் அஜித் மூன்று விதமான கெட்டப்களில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் குவிந்த கவனத்தைப் பெற்றன. குறிப்பாக, டீசர் படம் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தால் ஏற்பட்ட ஏமாற்றத்தை இந்த படம் நிவர்த்தி செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
முதலில், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இந்த படத்திற்கு பிரிமியர் காட்சிகள் நடத்தப்படும் என திட்டமிடப்பட்டது, ஆனால் பின்னர் அவை ரத்து செய்யப்பட்டது. எனினும், அமெரிக்காவில் பிரிமியர் காட்சிகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக இந்தியாவில் படம் ரிலீசான ஒரு நாள் முன்பே (சில மணிநேரங்கள்) அங்கு ரிலீசாகவுள்ளது. இதனால், சமூகவலைதளங்களில் வெளியான விமர்சனங்கள் இந்திய ரசிகர்களின் திரைப்படத்தை பார்ப்பதற்கான ஆர்வத்தை பாதிக்க வாய்ப்பு உள்ளது.