சென்னை: ஜனநாயகன் படம் இணையதளத்தில் லீக் செய்யப்பட்டது தொடர்பாக முக்கிய குற்றவாளியை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
‘ஜன நாயகன்’ படம் இணையத்தில் வெளியான சம்பவம் படக்குழு மற்றும் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதுதொடர்பாக பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, ‘ஜன நாயகன்’ படம் இணையத்தில் வெளியானது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
‘ஜன நாயகன்’ படம் இணையத்தில் வெளியானது தொடர்பாக படத்தயாரிப்பு நிறுவனம் தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்திருந்தது. புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் போலீசார் சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்தது தொடர்பாக முக்கிய குற்றவாளி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனநாயகன் படம் இணையதளத்தில் லீக் செய்யப்பட்டது தொடர்பாக முக்கிய குற்றவாளியை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்
ப்ரீலேன்சர் அசிஸ்டண்ட் விஷ்வல் எடிட்டர் மூலமாக ஜனநாயகன் சமூக வலைதளங்களில் கசிந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது