By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அது டாக்டர் வேடம்… சர்ச்சைக்கு பின் பூசி மெழுகிய டிரம்ப்
    1 Min Read
    331 குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி. தொற்று உறுதி: பாகிஸ்தானில் அதிர்ச்சி
    2 Min Read
    சுற்றுலா பயணிகளை அதிக அளவு ஈர்க்கும் ஒளிரும் கடல்!
    1 Min Read
    இந்திய பயணத்தை ஆவலுடன் மார்கோ ரூபியா எதிர்நோக்கியுள்ளாராம்
    1 Min Read
    டிரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் மீது குவைத் குற்றச்சாட்டால் பரபரப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
    1 Min Read
    யமுனை நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 யாத்திரிகர்கள் பலி
    1 Min Read
    சிறப்பு தகுதிகளுடன் கூடிய 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ஒப்புதல்
    2 Min Read
    3 மாநில தேர்தல்… விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு
    2 Min Read
    சிறுமியை கட்டி வைத்து தாக்கிய மாஜி ராணுவ வீரரால் பரபரப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கீரைகள் கலந்த மூலிகை சூப் தயாரிக்கும் முறை
    1 Min Read
    வளரும் குழந்தைக்கு அளிக்க வேண்டிய சத்தான உணவுகள்
    1 Min Read
    குழந்தைகள் அதிக உடல் எடை கூடுவதற்கு என்ன காரணம்
    1 Min Read
    தங்க நகைகளை எப்போதும் புதிது போல் பராமரிக்க டிப்ஸ்
    2 Min Read
    உச்சம் காட்டும் வெயில்… அச்சத்தில் வீட்டில் முடங்கும் மக்கள்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: விஜய்யின் கடைசி படம் ‘ஜனநாயகன்’ பற்றி வெளியான தகவல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > விஜய்யின் கடைசி படம் ‘ஜனநாயகன்’ பற்றி வெளியான தகவல்
சினிமா

விஜய்யின் கடைசி படம் ‘ஜனநாயகன்’ பற்றி வெளியான தகவல்

admin
Last updated: May 29, 2025 8:23 pm
By admin 2 Min Read
Share
SHARE

விஜய் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகும் ‘ஜனநாயகன்’ திரைப்படம், அவரின் கடைசி படம் என கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மும்முரமாக நடைபெற்றுவந்தது. சமீபத்தில், விஜய்யின் காட்சிகளுக்கான ஷுட்டிங் முழுமையாக முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கி, விரைவில் அரசியலில் தீவிரமாக ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால், சினிமாவை விட்டுவிட்டு முழுமையாக அரசியலில் கவனம் செலுத்த போவதாகத் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் மனமுடைந்துள்ளனர்.

விஜயின் கடைசி படத்தை எச். வினோத் இயக்குவது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இவர் ஏற்கனவே அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியவர். ஜனநாயகன் படப்பிடிப்பு மே 26 ஆம் தேதி விஜய்யின் கடைசிக் காட்சிகளுடன் முடிந்ததாக கூறப்படுகிறது.

படப்பிடிப்பின் கடைசி நாளில் இயக்குநர் வினோத், விஜய்க்கு சிறப்பு பாராட்டுவிழா ஏற்பாடு செய்ய திட்டமிட்டிருந்தார். ரசிகர்களை அழைத்து, எமோஷனல் Farewell கொடுக்க நினைத்தார். ஆனால், இது குறித்து தெரிந்த விஜய், உணர்ச்சி வசப்பட விருப்பமில்லை என கூறி அதை மறுத்துவிட்டார்.

விஜய் கூடுதலாக இரண்டு நாள் கால்ஷீட்டை கூட ஒதுக்க வேண்டாம் என்றும், பார்ட்டி வேண்டாம் என்றும் திட்டவட்டமாக கூறியதாக தகவல்கள் கூறுகின்றன. அவர் தன்னலமின்றி இறுதி வரை வேலைக்கு முழுமையாக அர்ப்பணித்தது படக்குழுவினரைக் கவர்ந்துவிட்டது.

‘ஜனநாயகன்’ படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். பீஸ்ட் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் நடிகை. மேலும், கெளதம் மேனன், பிரியாமணி, நரேன், மமிதா பைஜு, பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு பிரம்மாண்டமாக வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். ரசிகர்கள், விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி படம் தொடர்பான அப்டேட் வரும் என எதிர்பார்த்தனர்.

ஆனால், விஜய் தற்போது அரசியல் பணி மீது கவனம் செலுத்தி வருவதால், எந்த அறிவிப்பும் இப்போது வேண்டாம் என கூறியுள்ளார். எனவே, படம் வெளியாகும் காலத்துக்கு அருகில் அப்டேட் வெளியிடப்படலாம் எனக் கூறப்படுகிறது.

விஜயின் கடைசி படம் என்ற செய்தி ரசிகர்களை உணர்ச்சிவசப்பட செய்தாலும், ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஒரு இனிமையான விடைபெறலாக இருக்கும் என நம்பப்படுகிறது.

You Might Also Like

கொரியன் பேமிலி பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பு

கென் கருணாஸ் இயக்கிய யூத் திரைப்படம் ரூ.82 கோடிக்கும் அதிகம் வசூல்

நயன்தாராவுக்கு கோபம் வந்தால் பயங்கரமாக இருக்கும்… சொன்னது யார் தெரியுங்களா?

ஜெயிலர் 2 படத்தின் காட்சிகளும் இணையத்தில் கசிந்ததால் அதிர்ச்சி

காதலருக்கு அதிர்ச்சி கொடுத்த ஜாக்குலின் பெர்னாண்டஸ்… அப்ரூவராக மாறுகிறார்

TAGGED:MovieShootingTVKவிஜய்ஷுட்டிங்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

கீரைகள் கலந்த மூலிகை சூப் தயாரிக்கும் முறை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?