பிரேசில்: பிரேசில் கால்பந்து அணியில் நெய்மருக்கு மீண்டும் நம்பர்-10 ஜெர்சி வழங்கப்பட்டுள்ள நிலையில், வினிசியஸ் ஜூனியர் நம்பர்-7 ஜெர்சியுடன் களமிறங்க உள்ளார்.
பிபா உலக கோப்பை கால்பந்து தொடருக்கான பிரேசில் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சி’ பிரிவில் இடம்பெற்றுள்ள பிரேசில் அணி, தனது முதல் போட்டியில் மொராக்கோவை எதிர்கொள்கிறது.
காயம் மற்றும் உடல்தகுதி பிரச்சினைகளால் கடந்த 2023 அக்டோபர் முதல் எந்தப் போட்டியிலும் விளையாடாத முன்னாள் கேப்டன் நெய்மர் மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளார்.
பிரேசில் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரராக உள்ள நெய்மர் வழக்கமாக நம்பர்-10 ஜெர்சி அணிவார். அவர் இல்லாத காலத்தில் வினிசியஸ் ஜூனியர் அந்த ஜெர்சியை பயன்படுத்தி வந்தார்.
இருவரும் அணியில் இடம்பெற்றதால் நம்பர்-10 ஜெர்சி யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்தது. இறுதியில் அணியின் முடிவை ஏற்று வினிசியஸ் ஜூனியர் நம்பர்-7 ஜெர்சியை தேர்வு செய்துள்ளார்.
இதனால் நெய்மர் மீண்டும் தனது பாரம்பரிய நம்பர்-10 ஜெர்சியுடன் களமிறங்க உள்ளார்.