ஜகார்த்தா: இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருனன் – எம்.ஆர்.அர்ஜுன் ஜோடி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்திய ஜோடி மலேசியாவின் ஆரோன் தாய் – காங் காய் ஜிங் ஜோடியை எதிர்கொண்டது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி 16-21, 21-15, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் ஹரிஹரன் அம்சகருனன் மற்றும் எம்.ஆர்.அர்ஜுன் ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.