துபாய்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மாலை நேரங்களில் பிங்க் பந்தை பயன்படுத்தும் புதிய சோதனை முயற்சிக்கு ஐசிசி அனுமதி வழங்கியுள்ளது.
வழக்கமாக டெஸ்ட் போட்டிகளில் சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மாலை நேரங்களில் வெளிச்சம் குறைவாக இருக்கும் சூழலில் ஓவர்கள் முழுமையாக வீசப்படுவதில் சிக்கல் ஏற்படுகிறது.
இதனைத் தவிர்க்கும் வகையில் பகலிரவு டெஸ்டில் பயன்படுத்தப்படும் பிங்க் பந்தை குறிப்பிட்ட நேரங்களில் பயன்படுத்த அணிகள் முன்கூட்டியே ஒப்புக்கொண்டால் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தேநீர் இடைவேளையின்போது பயிற்சியாளர்கள் மைதானத்திற்குள் சென்று வீரர்களுடன் ஆலோசனை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.