புதுடில்லி: 2027 ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி 53 சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உள்ளது.
2027 உலகக் கோப்பை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா நாடுகளில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் அணிகளின் எண்ணிக்கை 10ல் இருந்து 14 ஆக அதிகரிக்கப்படுகிறது.
உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணி 10 டெஸ்ட், 20 ஒருநாள் மற்றும் 23 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
ஜூன் 6ம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிகளுடன் இந்த அட்டவணை தொடங்குகிறது. பின்னர் அயர்லாந்து, இங்கிலாந்து, ஜிம்பாப்வே மற்றும் இலங்கை சுற்றுப்பயணங்களிலும் இந்திய அணி பங்கேற்கிறது.
இறுதியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடருடன் இந்த அட்டவணை நிறைவடைகிறது.