புதுடில்லி: வாக்குப்பதிவு வீடியோ காட்சிகளை பாதுகாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாக்குப்பதிவின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோகளை பாதுகாத்து வைத்திருக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், வாக்காளர் எண்ணிக்கையை 1,500ஆக உயர்த்தும்போது ஏற்படும் சூழ்நிலையை எப்படி சமாளிக்க முடியும் என கேள்வி எழுப்பியது. மேலும் தேர்தல் ஆணையம் 3 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டது.