புதுடெல்லி:இமாச்சலில் உள்ள தலாய்லாமாவுக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கி உள்ளது.
திபெத்திய மத குரு தலாய்லாமாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவு அமைப்புகள் எச்சரித்ததை அடுத்து, அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.
திபெத் விவகாரத்தில் தலாய்லாமா மீது கோபத்தில் உள்ள சீனா, அவரை கொல்ல பல்வேறு வழிகளில் முயற்சிப்பதாக இந்திய உளவு அமைப்புகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில், இமாச்சலில் உள்ள அவருக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.