By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    டெக்சாஸில் பயங்கரம்… ராணுவ அபாச்சி ஹெலிகாப்டர் விபத்தில் 2 பேர் பலி; காட்டுத்தீயால் மக்கள் வெளியேற்றம்
    1 Min Read
    உலக சந்தையில் பதற்றம்… கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவிலும் தாக்கம்!
    0 Min Read
    இன்று வானில் அரிய காட்சி… சூரிய கிரகணத்துடன் பெர்சீட் விண்கற்கள்!
    0 Min Read
    நியூசிலாந்து பிரதமருக்கு நெருக்கடி… தலைமைப் பதவி வாக்கெடுப்பில் தப்பினார்!
    0 Min Read
    பிரிட்டன் மற்றும் பிரான்ஸில் 5-வது வெப்ப அலை: 44°C வரை சுட்டெரிக்கும் வெயில்!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    புதுச்சேரியில் கனரக வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு: காலை 7–10, மாலை 4–7 மணி வரை தடை
    1 Min Read
    இமாச்சலில் 43 நாட்கள் தொடர் மழை… பலி 70 ஆக உயர்வு; ரூ.910 கோடி சேதம்!
    1 Min Read
    தூத்துக்குடி விவசாயிகள் கவலை… நிதின் கட்கரியை சந்தித்து கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
    1 Min Read
    நடுவானில் 300 அடி திடீர் சரிவு… கஞ்சா போதையில் இருந்தாரா ஏர் இந்தியா விமானி?
    1 Min Read
    மகாராஷ்டிராவில் ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு புதிய விதி… மராத்தி தெரியாவிட்டால் உரிமம் ரத்து!
    0 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்து அதிகாரப்பூர்வ விசாரணை தொடக்கம்
    1 Min Read
    220 கோயில்களில் அறங்காவலர் நியமனம்… விண்ணப்பிக்க ஆக.28 வரை அவகாசம் நீட்டிப்பு
    1 Min Read
    கிராமப்புற அரசுப் பள்ளிகளுக்கு ரூ.87 கோடி… கழிப்பறை, தூய்மைப் பணிகளுக்கு தமிழக அரசு ஒப்புதல்
    1 Min Read
    சரும பராமரிப்புக்கு உகந்த உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
    கண் கருவளையம் மறைய எளிமையான அருமையான டிப்ஸ்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: பேரவைத் தலைவர் விசாரணை நடத்தாதது சட்டரீதியாக ஏற்க முடியாது என வாதம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: பேரவைத் தலைவர் விசாரணை நடத்தாதது சட்டரீதியாக ஏற்க முடியாது என வாதம்
அரசியல் செய்திகள்

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: பேரவைத் தலைவர் விசாரணை நடத்தாதது சட்டரீதியாக ஏற்க முடியாது என வாதம்

Nagaraj
Last updated: August 13, 2026 11:28 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறப்படும் 6 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்த விவகாரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

ராஜினாமா கடிதங்களை ஏற்கும் முன்பு எம்.எல்.ஏ.க்கள் சுயவிருப்பத்துடன் பதவி விலகினார்களா என்பதை பேரவைத் தலைவர் விசாரிக்கவில்லை என்பதால், அந்த நடவடிக்கை சட்டரீதியாக ஏற்கத்தக்கதல்ல என அதிமுக கொறடா தரப்பில் வாதிடப்பட்டது.

மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தக் கோரி அதிமுக சார்பில் பேரவைத் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே அவர்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.

ராஜினாமாவை பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து அந்தத் தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்டன. இதை எதிர்த்து அதிமுக கொறடா எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

விசாரணையில் மூத்த வழக்கறிஞர் வி.கிரி, கட்சித் தாவல் நடவடிக்கை நிலுவையில் இருந்தபோதே ராஜினாமா ஏற்கப்பட்டதாகவும், எம்.எல்.ஏ.க்களின் சுயவிருப்பம் குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என்றும் வாதிட்டார். பேரவைத் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியும் பதில் அளிக்கப்படவில்லை என்றும், பேரவைச் செயலர் தாக்கல் செய்த பதில் மனுவை பேரவைத் தலைவர் சார்பிலான பதில் மனுவாக ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், ராஜினாமா செய்த 30 நிமிடங்களிலேயே அவர்கள் தவெகவில் இணைந்தது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாகவும் அதிமுக தரப்பு வாதிட்டது. விசாரணை நிறைவடையாததால் வழக்கு ஆகஸ்ட் 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

You Might Also Like

பெரியாறு அணையை ட்ரோனில் படம் பிடித்த விவகாரம்: “இது இந்தியா–பாகிஸ்தான் எல்லையா?” கேரள அமைச்சர் கேள்வி

தமிழகத்துக்கு காவிரி நீரை உடனடியாக திறக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் நாகை எம்.பி. வலியுறுத்தல்

சட்டப்பேரவையில் இனி 7 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே! குறுக்கீடுகளுக்கு பேரவைத் தலைவர் கட்டுப்பாடு

தொகுதி மறுவரையறை: தமிழக எம்.பி.க்கள் எண்ணிக்கை 59 ஆக வாய்ப்பு? பேரவையில் பிரேமலதா வலியுறுத்தல்

ரூ.2 கோடி நிதியுதவி… தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தொழிலதிபர் வழங்கினார்!

TAGGED:AIADMKAssembly SpeakerdefectionHigh CourtMLA ResignationTVKஅதிமுகஉயர் நீதிமன்றம்எம்எல்ஏ ராஜினாமாகட்சித்தாவல்தவெகபேரவைத் தலைவர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

ஆன்மீகம்

தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

By Nagaraj 1 Min Read

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj
சினிமா

ரூ.8 லட்சத்தில் இருந்து ரூ.2 கோடி! – மமிதா பைஜுவின் சம்பள வளர்ச்சி ஆச்சரியம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சமையல் குறிப்புகள்

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

சென்னை: பழம் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பழங்கள் சேர்த்து கேசரி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். இந்த கேசரிக்கு சீசனில் கிடைக்கும் எல்லா…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?