By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    சிரியாவுடன் உறவை வலுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்! முதலீடு மற்றும் பாதுகாப்பில் புதிய அணுகுமுறை
    1 Min Read
    ரஷ்யா – உக்ரைன் இடையே போர் கைதிகள் பரிமாற்றம்! அபுதாபி பேச்சுவார்த்தையில் முக்கிய முன்னேற்றம்
    1 Min Read
    காங்கோவில் எபோலா பாதிப்பு 11 ஆயிரத்தைத் தாண்டியது! 5,387 பேர் உயிரிழப்பு
    1 Min Read
    ரஷ்யாவின் லெனின்கிராட் பகுதியில் 92 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன
    1 Min Read
    தென்கொரியாவில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய பஸ்; 57 பேர் காயம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளில் ரூ.73,200 கோடி முதலீடு! சென்செக்ஸ் 9 மாத உச்சத்தை நெருங்கியது
    1 Min Read
    போலி நீதிமன்ற உத்தரவுகளைப் பயன்படுத்தி 129 இணையதளங்கள் முடக்கம்! விசாரணையைத் தொடங்கிய போலீசார்
    1 Min Read
    பழைய லித்தியம் பேட்டரி கழிவுகள் ஏற்றுமதிக்குத் தடை! உள்நாட்டு மறுசுழற்சியை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை
    1 Min Read
    பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு புகார்; பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
    1 Min Read
    காற்று மாசுபாட்டால் இந்தியாவுக்கு ஆண்டுக்கு ரூ.பல லட்சம் கோடி இழப்பு; ஃபிக்கி எச்சரிக்கை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ஓஎன்ஜிசியில் 3,047 அப்ரண்டிஸ் பணியிடங்கள்! நவம்பர் 20 வரை விண்ணப்பிக்கலாம்
    1 Min Read
    டெல்டா மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை! இன்று ராமநாதபுரம், தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு
    1 Min Read
    சென்னைக்குக் குடிநீர் வழங்கும் சோழவரம் ஏரியில் மணல் கொள்ளை! 17 லாரிகள், 3 இயந்திரங்கள் மூலம் அகழ்வு
    1 Min Read
    ஹோசூர் டாடா தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி; விசாரணை தீவிரம்
    1 Min Read
    தீபாவளி பலகாரங்கள் மீதம் இருக்கிறதா? கெட்டுப்போகாமல் பாதுகாக்க இதைச் செய்யுங்கள்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: “நான் நலமாக இருக்கிறேன்” என மெசேஜ்… சில வாரங்களில் 9 துண்டுகளாக கிடைத்த உடல் – ஷார்ஜாவில் பயங்கரம்!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > “நான் நலமாக இருக்கிறேன்” என மெசேஜ்… சில வாரங்களில் 9 துண்டுகளாக கிடைத்த உடல் – ஷார்ஜாவில் பயங்கரம்!
உலகம்

“நான் நலமாக இருக்கிறேன்” என மெசேஜ்… சில வாரங்களில் 9 துண்டுகளாக கிடைத்த உடல் – ஷார்ஜாவில் பயங்கரம்!

Nagaraj
Last updated: September 24, 2026 2:13 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

பெங்களூரு: ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் 14 ஆண்டுகளாக பணியாற்றி வந்த கர்நாடகாவைச் சேர்ந்த ஆல்ஃபின் பிரகாஷ் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரில் 9 துண்டுகளாக அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், மனைவி மற்றும் மகனும் காணாமல் போயிருப்பது வழக்கில் மர்மத்தை அதிகரித்துள்ளது.

உடுப்பி மாவட்டம் குந்தாபுராவைச் சேர்ந்த ஆல்ஃபின் பிரகாஷ் குந்தர், ஷார்ஜா விமான நிலையத்தில் சுமார் 14 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். அவரது மனைவி டினா அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாகவும், மகன் 10-ம் வகுப்பு மாணவராகவும் இருந்தனர்.

கடந்த ஜூலை 20-ம் தேதி ஆல்ஃபினின் சகோதரர் அனில் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டார். அழைப்பை ஏற்காத ஆல்ஃபின், தான் நலமாக இருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.

பின்னர் அவரையும் மனைவியையும் தொடர்புகொள்ள முடியாததால் அனில் சந்தேகமடைந்தார். ஷார்ஜாவில் இருந்த நண்பர் மூலம் வீட்டில் விசாரித்தபோது, குடும்பத்தினர் இந்தியாவுக்கு சென்றுவிட்டதாக காவலாளி தெரிவித்தார்.

ஆனால், விமானப் பயணப் பதிவுகளை சோதித்தபோது ஆல்ஃபின், அவரது மனைவி மற்றும் மகன் இந்தியா வரவில்லை என்பது தெரியவந்தது.

காருக்குள் கொடூரமாக…

இதையடுத்து போலீசார் ஆல்ஃபினின் செல்போன் நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர். அவர் கடைசியாக ஓமன் செல்லும் சாலையை நோக்கிச் சென்றது தெரியவந்தது.

அந்த பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் இரண்டு பைகளில் ஆல்ஃபினின் உடல் 9 துண்டுகளாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடல் ஆகஸ்ட் 12-ம் தேதி மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அடுக்குமாடி குடியிருப்பு சி.சி.டி.வி. காட்சிகளில் 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் அவசரமாக காரில் இருந்து வெளியேறும் காட்சிகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே ஆல்ஃபினின் மனைவி மற்றும் மகன் எங்கு உள்ளனர் என்பது தெரியவில்லை. இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து ஐக்கிய அரபு அமீரக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

You Might Also Like

போலி நீதிமன்ற உத்தரவுகளைப் பயன்படுத்தி 129 இணையதளங்கள் முடக்கம்! விசாரணையைத் தொடங்கிய போலீசார்

சிரியாவுடன் உறவை வலுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்! முதலீடு மற்றும் பாதுகாப்பில் புதிய அணுகுமுறை

ரஷ்யா – உக்ரைன் இடையே போர் கைதிகள் பரிமாற்றம்! அபுதாபி பேச்சுவார்த்தையில் முக்கிய முன்னேற்றம்

காங்கோவில் எபோலா பாதிப்பு 11 ஆயிரத்தைத் தாண்டியது! 5,387 பேர் உயிரிழப்பு

பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு புகார்; பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

TAGGED:Alwin PrakashkarnatakaMissing Familypolice investigationSharjah MurderUdupiஆல்ஃபின் பிரகாஷ்உடுப்பிகர்நாடகாபோலீஸ் விசாரணைமனைவி மகன் மாயம்ஷார்ஜா கொலை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

நல்ல கதை கிடைத்தால் மீண்டும் நடிப்பேன்! நடிகை ரோஜா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

By Nagaraj 1 Min Read

‘ராமாயணா’ படத்தைப் பார்த்து வியந்த ராம் கோபால் வர்மா! இந்திய சினிமாவின் தாஜ்மஹால் எனப் பாராட்டு!

By Nagaraj
சினிமா

தீபாவளி கொண்டாட்டத்தில் அஜித் – ஷாலினி! நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியான அழகான புகைப்படம்!

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

சர்வதேச எம்மி விருது மேடையில் விஜய் சேதுபதி! முதல் இந்தியராகப் புதிய பெருமை!

தமிழ் திரையுலகின் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு சர்வதேச அளவில் புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. சர்வதேச எம்மி விருது விழாவில் விருது…

By Nagaraj
சினிமா

14 ஆண்டு காதலுக்கு திருமணத்தில் முற்றுப்புள்ளி அல்ல; புதிய தொடக்கம்! பிரியா பவானி சங்கர் பகிர்ந்த மகிழ்ச்சி!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர் தனது நீண்ட நாள் காதலரான ராஜ்வேல் ராஜை…

By Nagaraj
சினிமா

கிரீஸில் திருமணம் முடித்த அனிருத் – காவ்யா மாறன்! வைரலாகும் புதிய புகைப்படங்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் தொழிலதிபர் காவ்யா மாறன் திருமணம் கிரீஸ் நாட்டில் கோலாகலமாக நடைபெற்றது. நவம்பர்…

By Nagaraj
சினிமா

இளைஞர்களைக் கவர வரும் ‘லவ் மேட்டர்’! லுங்கி பாய்ஸ் ராஜ்பிரியன் பாடிய கலகலப்பான பாடல்!

இன்றைய இளம் தலைமுறையினரின் காதல், வாழ்க்கை மற்றும் உறவுகள் குறித்த புரிதலை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது 'லவ் மேட்டர்' திரைப்படம்.…

By Nagaraj
சினிமா

நாளை ஓடிடியில் வெளியாகும் அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’! எந்தத் தளத்தில் பார்க்கலாம்?

நடிகர் அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியான 'அன்பில் அவன்' திரைப்படம் ஓடிடி வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. திரையரங்குகளில் வெளியாகி…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?