சென்னை: தமிழக சட்டப்பேரவையில் த.வெ.க. எம்.எல்.ஏ. ஒருவர் “மனமார்ந்த நன்றி” என்பதற்குப் பதிலாக “மன்மத நன்றி” என தவறுதலாகக் கூறிய சம்பவமும், அதற்கு சக பெண் எம்.எல்.ஏ. அளித்த ரியாக்ஷனும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கள்ளக்குறிச்சி தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் சட்டப்பேரவையில் பேசும்போது, பேரவைத் தலைவர் மற்றும் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க முயன்றார். அப்போது “மனமார்ந்த நன்றி” என்று கூறுவதற்குப் பதிலாக, தவறுதலாக “மன்மத நன்றி” என உச்சரித்தார்.
இதைக் கேட்ட முன்வரிசையில் அமர்ந்திருந்த கோவை கவுண்டம்பாளையம் தொகுதி த.வெ.க. பெண் எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ், ஆச்சரியம் கலந்த முகபாவனையை வெளிப்படுத்தினார்.
சில நாட்களுக்கு முன்பு கனிமொழி சந்தோஷும் சட்டப்பேரவை விவாதத்தின் போது “மனமார்ந்த நன்றி” என்பதற்குப் பதிலாக “மன்மத நன்றி” எனக் கூறியிருந்தார். அந்த சம்பவம் அப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது.
இந்நிலையில் அதே கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ. அதே வார்த்தையை மீண்டும் கூறியதால், கனிமொழி சந்தோஷின் ரியாக்ஷன் உறுப்பினர்களிடையே சிரிப்பை ஏற்படுத்தியது. அருகில் இருந்த சில எம்.எல்.ஏ.க்களும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தனர்.
இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
