சென்னை: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் வலுவான பொருளாதார கொள்கைகளால், 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளதாக பாஜக முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
தேசிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2025-26 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.5 சதவீதமாக இருந்தது.
உலகளவில் நிலவிய பொருளாதார மந்தநிலை, தங்கம் விலை உயர்வு, அமெரிக்கா-ஈரான் போர், அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு காரணிகள் இந்திய பொருளாதாரத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்தின.
இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் வலிமையான பொருளாதார கொள்கைகளால் 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
எத்தனை சவால்கள் வந்தாலும் இந்திய பொருளாதாரம் வலிமையாகவும் தொடர்ந்து முன்னேறி வருவதையும் இந்த வளர்ச்சி பிரதிபலிப்பதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
