சென்னை: ஊரக நலப்பணிகள் இயக்ககத்திற்கு 2 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 40 புதிய வாகனங்களின் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய். பின்னர் அதில் ஒரு வாகனத்தை தானே இயக்கிப் பார்த்தார்.
பொலீரோ வாகனத்தில் ஏறி முதலில் சீட்பெல்ட்டை அணிந்து கொண்ட அவர், தலைமைச் செயலகத்தில் வலம் வந்தார். ஊரக நலப்பணிகள் இயக்ககத்திற்கு 2 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 40 புதிய வாகனங்களின் சேவையை தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய், அதில் ஒரு வாகனத்தை தானே இயக்கிப் பார்த்தார்.
முன்னதாக, அயோத்திதாசரின் பிறந்தநாளை முன்னிட்டு கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் இணைந்து முழக்கமிட்டார்.