By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்த கடும் எச்சரிக்கை
    1 Min Read
    பிபா உலகக்கோப்பை கால்பந்து… பள்ளிகளுக்கு 40 நாட்கள் முன்கூட்டியே விடுமுறை!
    1 Min Read
    ஈரானுக்கு எதிராக அமெரிக்கா எடுத்த நடவடிக்கை – 61 கப்பல்களை திருப்பி அனுப்பியது!
    1 Min Read
    9 ஆண்டுகளுக்குப் பின்னர் சீனா செல்லும அமெரிக்க அதிபர் டிரம்ப்!
    1 Min Read
    பாதுகாப்பு காரணங்களால் புதின் எடுத்த அதிரடி முடிவு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    டிஜிட்டலில் நடக்கும் நூதன மோசடி… விழித்துக் கொள்ளுங்கள்
    3 Min Read
    இருதய பாதிப்பினால் ஏற்படும் திடீர் உயிரிழப்பை தவிர்ப்பது எப்படி ?
    1 Min Read
    எஸ்.பி.ஐ. வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் 4 நாட்கள் சேவை முடங்கும் அபாயம்
    1 Min Read
    நீட் வினாத்தாள் கசிவு புகார்… தேர்வை ரத்து செய்தது தேசிய தேர்வு முகமை
    1 Min Read
    பெட்ரோல் விலையை கட்டுக்குள் இந்தியா வைத்திருப்பது எப்படி?
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ஒற்றை தலைவலி பிரச்சனையை சரிப்படுத்தும் திராட்சை பழம்!
    1 Min Read
    உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளும் தீர்வு தரும் மருதாணி!
    1 Min Read
    பெண்கள் சீக்கிரமாக உடல்பருமன் பிரச்சனைக்கு ஆளாவது ஏன்?
    2 Min Read
    உடலுக்கு தேவையான பல சத்துக்கள் நிறைந்த சுரைக்காய்!
    1 Min Read
    உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளும் தீர்வு தரும் மருதாணி!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: கொள்கையில் திமுக உறுதியாக இருக்கும்… மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > கொள்கையில் திமுக உறுதியாக இருக்கும்… மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
அரசியல் செய்திகள்

கொள்கையில் திமுக உறுதியாக இருக்கும்… மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Nagaraj
Last updated: May 13, 2026 5:44 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தன் கொள்கையில உறுதியா இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியா செயல்படும்! என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க எந்த கட்சிக்கும் 118 இடங்கள் பெரும்பான்மை கிடைக்காததால், 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற த.வெ.கவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டு இருந்தார்.

இதன்படி இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஆதரவாக 144 வாக்குகள் விழுந்தது. எதிர்க்கட்சியான தி.மு.க இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தது.

இந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தன் கொள்கையில உறுதியா இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியா செயல்படும்! என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் உறுதியுடன் தெரிவித்துள்ளார். இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவு வருமாறு:-

“தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது” என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.

அதேபோன்று சட்டமன்றத்தில் இருக்கும் எங்கள் தோழமை இயக்க உறுப்பினர்களான சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகிய உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய தோழமைக் கட்சிகள், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவர்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம்.

ஆனால், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த எல்லாரோட நம்பிக்கையையும் சிதைக்கும் வேலையில தமிழக வெற்றிக் கழகம் இறங்கியிருக்கு. அதற்கு சாட்சி, ஆளுங்கட்சியின் கடந்த 3 நாட்களின் செயல்பாடுகளும், அதற்கு எங்க தோழமைக் கட்சியினர் கொடுத்த அறிக்கைகளும்! ஆட்சி நிலைக்கத் தேவையான எண்ணிக்கை எங்கள் தோழமை இயக்க நிலைப்பாட்டால் இருந்தாலும், இன்றைய ஆளுங்கட்சி என்ன செய்திருக்கிறது?

Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க. பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க. “உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா?” எனத் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களிச்ச மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகிடுச்சு.

முதல்வர் அவர்களே, உங்க செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்க்குறாங்க. அடுத்து, பிளவுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு நீங்க என்ன Return Gift கொடுக்கப் போறீங்க என்பதையும் மக்கள் பார்க்கத்தான் போறாங்க.

எங்களைப் பொறுத்தவரை, திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தன் கொள்கையில உறுதியா இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியா செயல்படும்!

You Might Also Like

ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனத்தை திரும்ப பெற்றது அரசு

நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் போது கடுமையான விமர்சனம் வைத்த உதயநிதி ஸ்டாலின்

தவெக அரசுக்கு 144 வாக்குகள் ஆதரவு… எதிர்ப்பு 22 வாக்குகள்: பெரும்பான்மை நிரூபிப்பு

எம்எல்ஏ சபரிநாதனுக்கு வழங்கப்பட்டுள்ள கொறடா பொறுப்பு

அவ்வளவுதான்… ராமநாதபுரம் மாவட்ட அமமுக கட்சி நிர்வாகிகள் விலகல்

TAGGED:creativitydeterminationDMKOppositionPolicyregretful stateஆக்கப்பூர்வம்உறுதிஎதிர்க்கட்சிகொள்கைதிமுகவருந்திப் பேசும் நிலை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனத்தை திரும்ப பெற்றது அரசு

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?