கர்நாடகா: கர்நாடகாவில் தேர்தல் முறைகேட்டை விசாரிக்க முதல்வர் சித்தராமையா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நடந்து முடிந்த கர்நாடகா, மாகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், அரியானா சட்டமன்றத் தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல்களில் தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
அவர் கூறியதாவது, “கர்நாடகாவில் 16 இடங்கள் கிடைக்கும் என்று எங்கள் உள் கணக்கெடுப்பு கணித்திருந்தது. ஆனால் எங்களுக்கு ஒன்பது இடங்கள் மட்டுமே கிடைத்தன. நாங்கள் 7 இடங்களில் ஏன் தோற்றோம் என்பதை ஆராய்ந்தோம்.
குறிப்பாக மகாதேவபுரா தொகுதியில் 1,00,250 வாக்குகள் ஐந்து வெவ்வேறு முறைகள் மூலம் திருடப்பட்டதாக அவர் கூறினார். இதில் போலி வாக்காளர்கள், போலி முகவரிகள் மற்றும் ஒரே முகவரியில் பல வாக்காளர்கள், புகைப்படம் இல்லாத வாக்காளர்கள், படிவம் 6 முறைகேடு செய்தல் ஆகியவை அடங்கும்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, “மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டு தொடர்பான புகார்களை சட்டத்துறை விசாரிக்கும். அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணையை முடித்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிடப்படும்” என்று கூறினார்.
இதற்கிடையே “ராகுல் காந்தி ஆதாரம் காட்ட வேண்டும் அல்லது தனது பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.